உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் ஆலயத்தின் கதை!

ஜெருசலேம் ஆலயத்தின் கதை!

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசலேம் தேவாலயத்தில் இயேசுவை குழந்தை வடிவில் பிரதிஷ்டை செய்தனர். 12 வயது சிறுவனாக இருந்தபோது இந்த ஆலயத்தில் அமர்ந்து தான் இயேசு, போதகர்கள் மத்தியில் விவாதம் செய்தார் என பைபிளில் வருகிறது. இங்கிருந்த போது தான் இயேசு பல நோயாளிகளைக் குணப்படுத்தினார். இந்த ஆலயத்தை சுற்றியிருந்த காசுக்காரர்கள் எனப்படும் சில்லரை வியாபாரிகளை கண்டு கோபம் அடைந்த இயேசு, அவர்களை சவுக்கால் அடித்து விரட்டினார். கோவில் வியாபார ஸ்தலமல்ல’ என உரக்கச் சொன்னார். இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள், மூன்று நாட்களிலேயே புதிய ஆலயத்தை நிர்மாணிக்கிறேன்’ என்று சொன்னதற்காகத் தான், இயேசுவை தெய்வ நிந்தனை செய்ததாகச் சொல்லி சிலுவையில் அறைந்தனர். இயேசுவை சிலுவையில் அறைந்த போது இந்த ஆலயத்தில் தொங்கிய திரைச்சீலை கூட தன் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் இரண்டாகக் கிழிந்தது. “உன்னிடத்தில் ஒரு கல் இராதபடிக்கு செய்யும் நாட்கள் வரும்,” என்று இயேசு தீர்க்கதரிசனமாக சொன்னது தான் கி.பி.70ல் நிகழ்ந்தது. ஆம்... இந்த ஆலயம் இடிக்கப்பட்டு காணாமல் போய் விட்டது. தற்போதுள்ள ஜெருசலேம் ஆலயம் 1982ல் நிர்மாணிக்கப்பட்டதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !