உழவாரப்பணி செய்தால் இறையருள் பெறலாமா?
ADDED :3431 days ago
இதைவிட சிறந்த புண்ணிய செயல் எதுவும் கிடையாது. உழவாரப்பணி செய்தே சிவபெருமானை நேரில் தரிசித்தவர் திருநாவுக்கரசர். பழங்காலத்தில் கோவில்களில் கொடுத்த நைவேத்யங்களையும், சிறுதொகையையும் பெற்றுக்கொண்டு தெய்வ காரியமாக ஒரு தொண்டாகச் செய்தார்கள். சில கோவில்களில் இதற்காக மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலை முற்றிலுமாக மறைந்து விட்டது. இதனால் பலகோவில்களில் புதர்களும் மரங்களும் வளர்ந்து பாழடைந்து கிடக்கிறது. ஒரு சில கோவில்களில் மட்டும் பக்தர்கள் முடிந்த வரை இதைச் செய்கிறார்கள். நம்மை வாழ வைக்கும் தெய்வத்தின் கோவிலை எந்தப்பலனும் எதிர்பாராமல், உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் பலனடைவார்கள்.