இஸ்கான் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா
ADDED :3432 days ago
மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. பகவான் கிருஷ்ணர் பக்த பிரகலாதனுக்காக நரசிம்மராக அவதரித்தார். இதனை முன்னிட்டு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடும், பஞ்சராத்ர முறைப்படி மகா அபிஷேகமும் நடந்தது. இஸ்கான் மதுரை கிளையின் தலைவர் சங்கதாரிதாஸ் தலைமையில் ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை குறித்த சொற்பொழிவும் நடந்தது.