உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தேரோட்டம்

தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தேரோட்டம்

தளவாய்புரம்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இக்கோயில் திருவிழா கடந்த 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.7ம் நாளன்று சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி யானை வாகனம்,அம்பாள் பூ பல்லக்கில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது.கோயில் பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர் வடம்பிடித்து துவக்கி வைத்தார். முதலில் வந்த பெரிய தேரில் நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி பிரியாவிடை அம்மனுடனும், இரண்டாவது வந்த சிறிய தேரில் தவம்பெற்ற நாயகி அம்மன் வீற்றிருந்தார்.தேர் நான்கு மாட வீதிகள் வழியாக நிலை வந்தடைந்தது. சிறிய தேருக்கு பின்னால் கஷ்டங்கள்,பிணிகள் நீங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !