உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபால்பட்டியில் காளியம்மன் கோயில் விழா

கோபால்பட்டியில் காளியம்மன் கோயில் விழா

கோபால்பட்டி: கோபால்பட்டியில் காளியம்மன் கோயில் ஆண்டு உற்சவ விழா நடக்கிறது.  கடந்த மே 17 அன்று சாட்டுதலுடன் விழா துவங்கியது.  மறுநாள் விளக்கு பூஜை நடத்தி அம்மன் வழிபாடு நடந்தது. நேற்று மங்கம்பட்டி விநாயகருக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல்  வைத்து வழிபட்டனர். வருகிற மே 24 அன்று இரவு கரகம் ஜோடிக்கப்பட்டு வாண வேடிக்கை முழங்க அம்மன் சன்னதிக்கு செல்வார்.  மறுநாள்  காலை அம்மனுக்கு முளைப்பாரி , தீச்சட்டி, மாவிளக்கு எடுத்தல் மற்றும் கிடா வெட்டு நடைபெறும். மே 26 அன்று மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்÷ சாலை சென்றடைவதுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பொதுமக்கள், நாயுடு மகாஜன சங்க அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !