உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,மடவார்வளாகம் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவி.,மடவார்வளாகம் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு வைத்தியநாதசுவாமி, பிரியாவிடைஅம்பாள் ஒரு தேரிலும், சிவகாமி அம்பாள் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். ரகு பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, கோயிலை சுற்றி உள்ள 4 வீதிகளில் தேர் வலம் வர தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !