உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்: கவர்னர் துவக்கி வைத்தார்

திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்: கவர்னர் துவக்கி வைத்தார்

வில்லியனு?ர்: வில்லியனு?ர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை,  கவர்னர் ஏ.கே.சிங் வடம் பிடித்து துவக்கி வைத்தார். வில்லியனு?ர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கடந்த 2012ம் ஆண்டில் நடந்தது. அதன் பிறகு கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில்,  4 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதில் முக்கிய விழாவாக பாரிவேட்டை, திருக்கல்யாண உற்சவங்கள் நடந்தது. நேற்று தேர்திரு விழா நடந்தது. காலை 7:30 மணியளவில் புதுச்சேரி கவர்னர் ஏ.கே.சிங்., வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் நமச்சிவாயம், சுகுமாறன், கலெக்டர் ஜவகர், இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். முத லில் விநாயகர் தேர் வந்தது. பகல் 11:40க்கு திருக்காமீஸ்வரர் தேர் தன் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து கோகிலாம்பிகை தேர் தன்நிலையை அடைந்தது. இன்று (21ம் தேதி) இரவு 7:30 மணிக்கு மேல் தெப்பல் உற்சவமும்,  நாளை முத்துப் பல்லக்கும், 23ம் தேதி விடையாற்றி உற்சவமும், 24ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி தங்கமணி, கோவில் அர்ச்சகர்  பாலசுப்ரமணிய சிவாச்சார்யார் மற்றும் உற்சவதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !