லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம்
ADDED :3432 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் சுவாமி கோவிலில், நரசிம்ம ஜெயந்தி உற்சவம் நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, நரசிம்ம ஜெயந்தி உற்சவம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 10.00 மணிக்கு, லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8.00 மணிக்கு நவ நரசிம்மர், பானக நரசிம்மர் ஆகியோர் மங்களகிரி விமானத்தில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலி த்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.