அர்த்தநாரீஸ்வரருக்கு ரிஷி பஞ்சமி விழா
ADDED :5194 days ago
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரிஷிபஞ்சமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் ரிஷிபஞ்சமி தினத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் ரிஷிபஞ்சமியை முன்னிட்டு கருவறை சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனை நடந்தது. கோவில் குருக்கள் நாகராஜ், சோமு பூஜைகளை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.