உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தாண்டார்கோவிலில் தேரோட்டம்

உளுந்தாண்டார்கோவிலில் தேரோட்டம்

உளுந்துார்பேட்டை: உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீமாஷபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. உளுந்துார்பேட்டை பேரூராட்சி உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை வலமுறை ஸ்ரீமாஷபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா வந்தது. மறுநாள் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினசரி காலை பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம், இரவு திருவீதியுலா நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் தண்டபாணி, பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், ஸ்ரீவிநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தாளாளர் நமச்சிவாயம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தேர் வடம் பிடித்தனர். இன்று காலை 10.30 மணிக்கு மேல் ஞானதீர்த்தக் குளக்கரையில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கிறது. மாலை துவஜா அவரோகணமும், இரவு சண்டிகேஸ்வரர் திருவீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !