உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கபெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

சிங்கபெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

சிங்கப்பெருமாள் கோவில்:நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, சிங்கப்பெருமாள் கோவிலில் அமைந்துள்ள, பாடலாத்ரி நரசிம்ம பெருமாளுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலில், ஆண்டுதோறும் நரசிம்ம பெருமாளின் பிறந்த தினமான, வைகாசி சுவாதியை, நரசிம்ம ஜெயந்தி என, சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். அந்த வகையில், நேற்று இக்கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, காலை முதல், பெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருமஞ்சனம், பானகம், நெய்வேத்தியம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நாளில், பெருமாளை வழிபட்டால், திருமண தடை, மனக் கஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கும் என, கூறப்படுகிறது. 1,200 ஆண்டுகள் பழமையானதுமறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளால், இக்கோவில், 1,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவறைக் கோவில் என்பதும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !