உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

சிறுகடம்பூர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா நடந்தது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் 10 நாள் பிரம்மோற்சவம் கடந்த 10 ம் தேதி துவங்கியது. முதல் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். கொடியேற்றி காப்பு கட்டினர். அன்று இரவு பூ பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. மூன்றாம் நாள் திருவிழாவாக 13ம் தேதி சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். சாமி வீதி உலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் முக்கிய திருவிழாவான, திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அங்காரத்தில் எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக திருத் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !