பூவரசங்குப்பத்தில் நரசிம்மர் ஜெயந்தி
விழுப்புரம்: பூவரசங்குப்பம், லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணி முதல், 7:00 மணி வரை, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பின், தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு, ஹோமம் துவங்கி, நரசிம்மர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. பகல் 12:00 மணிக்கு, வசூத்ரா ஹோமம், 12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு, கும்ப தீர்த்தம் கொண்டு சென்று, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.