உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் திருக்கரவாசலில் சேற்றில் தேர் சிக்கி தேர் கவிழ்ந்தது!

திருவாரூர் திருக்கரவாசலில் சேற்றில் தேர் சிக்கி தேர் கவிழ்ந்தது!

திருவாரூர்: திருவாரூர் அருகே,திருக்கரவாசலில் சேற்றில் தேர் சிக்கியதில் கொத்தனார் இருவர் பலியாயினர். திருவாரூர் அருகே,திருக்கரவாசலில் நீலோத்தம்பாள் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், பிரமோற்சவ விழா நடந்து வருகிறது.ஒன்பதாம் நாள் விழாவாக நேற்று தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு, தியாகராஜர்,நீலோத்தம்பாள் சுவாமிகள் தேருக்கு எழுந்தருளினர். காலை 9:30 மணிக்கு, பக்தர்கள் தேரை வடம் பிடித்த இழுக்க துவங்கினர்.இருபது அடி துாரம் வந்தவுடன், சேற்றில் தேர் சிக்கியது.இருப்பினும்,தேரை பக்தர்கள் தொடர்ந்து இழுத்தனர். திருவாரூரைச் சேர்ந்த கொத்தனார்களான கல்யாண சுந்தரம்,55;முருகையன்,45, ஆகிய இருவரும் தேருக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். தேர் சேற்றில் உட்கார்ந்து முன்புறம் சாய துவங்கியதும் பக்தர்கள் சிதறி ஓடினர்.பக்தர்கள் சத்தமிட்டும், முட்டுக்கட்டை போட்ட இருவரும் வெளியே வரமுடியாமல் தேரின் முன்புறம் இருந்த குதிரை வாகனத்தில் சிக்கினர். படுகாயமடைந்த இருவரும், திருவாரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டனர். வழியில் இருவரும் இறந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.நேற்று இரவும் கனமழை பெய்தது.தேர் வீதி உலா வரும் சாலைகள் மிக மோசமாக உள்ளன.தார் சாலையான மூன்று வீதிகளும் மண்சாலை போல் காட்சி அளிக்கின்றன. மழை காரணமாக, தேர் கவிழ்ந்த இடத்தில் மண்,கல் கொட்டி நிரப்பி உள்ளனர். இருப்பினும்,தேர் கவிழ்ந்து விபத்து நடந்து, இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !