சந்திரபிரபை அலங்காரத்தில் வைகுண்டவாச பெருமாள் அருள்பாலிப்பு!
ADDED :3428 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, உற்சவர் சந்திரபிரபை அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி பகவத் அனுக்ஞை, மிருத ஸங்கிரனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. தெ ாடர்ந்து, 13ம் தேதி காலை 8:00 மணிக்கு பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து, 12 நாட்கள் நடக்கும் விழாவில் 17 ம் தேதி கருட சேவையிலும், 19ம் தேதி திருக்கல்யாணமும், 21ம் தேதி பிரம்மோற்சவ தேர் திருவிழாவும் நடந்தது. பத்தாம் நாள் விழாவான நேற்று, காலை திருமஞ்சணமும், மாலை சந்திரபிரபை அலங்காரத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.