உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சக்திமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வால்பாறை சக்திமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வால்பாறை: காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவிலின் திருவிழாவையொட்டி நடந்த, திருக்கல்யாணத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோவிலின், 36ம் ஆண்டு திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கும் விழாவும் நடந்தது. வரும் 29ம்தேதி முனீஸ்வரன் கோவில் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மஞ்சுபழனிச்சாமி, தர்மகர்த்தா சுப்பிரமணி, செயலாளர் ராமசந்திரன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !