சுந்தராபுரம் முத்துமாரியம்மன் கோவில் விழா
ADDED :3425 days ago
குறிச்சி: சுந்தராபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில், 35ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. குறிச்சி குளக்கரையிலுள்ள பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, சக்தி கரகம், தீர்த்த குடம், பால் குடத்துடன், அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிம்ம வாகனத்தில் வர, ஊர்வலம் துவங்கியது. பொள்ளாச்சி ரோடு, சங்கம் வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானமும், திருவீதி உலாவும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.