உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் ைவணவ மாநாடு

செஞ்சியில் ைவணவ மாநாடு

செஞ்சி: செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலனை சபை சார்பில் வைணவ ஆண்டு மாநாடு நடந்தது. செஞ்சி வட்ட மதுரகவி  ஆழ்வார் பரிபாலன சபை சார்பில், 27ம் ஆண்டு வைணவ மாநாடு செஞ்சி, வள்ளி அண்ணாமலை மாளிகையில் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த  21ம் தேதி மாலை ராதா ருக்மணி சமேத கண்ணபிரான் சாமி வீதி உலா பஜனை கோஷ்டிகள் புடை சூழ நடந்தது. நேற்று இரண்டாம் நாள் மாநாட்டில்,  சபை தலைவர் வேணுகோபால் கருட கொடியேற்றினார். சபை கவுரவ தலைவர் ரகுபதி தலைமையுரையாற்றினார். துணை தலைவர்கள் டாக்டர்  அண்ணாமலை, டாக்டர் ரமேஷ் பாபு, செயலாளர்கள் ஆதிமூலம், சங்கர், ராமதாஸ், நாராயணசாமி, ராமு, எத் திராஜ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். லோகநாதன், பரந்தாமன் திருமால் துதி பாடினர். தீனதயாளன் வரவேற்றார். ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தார். திண்டிவனம்  நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேசன், ஆஷா, தேவராஜ், முகுந்தன், ரகுபதி ஆகியோர் சொற்பொழிவாற்றினர். சபை செயலர் சுந்தர் நன்றி  கூறினார்.  இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பஜனை கோஷ்டிகள், பகவத் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !