உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நரசிங்கப்பெருமாள் சிலை!

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நரசிங்கப்பெருமாள் சிலை!

திருபுவனை: திருபுவனை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த  நரசிங்கப்பெருமாள் கல் சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன்  பார்த்து சென்றனர். திருக்கனுார்மதகடிப்பட்டு சாலை யில் உள்ள புராணசிங்குப்பாளையம் கிராமத்தின் வழியாக செல்லும் பம்பை ஆற்றின்  பாலத்தில் இருந்து 200மீ தொலைவில் ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் நேற்று காலை 11.30  மணிக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீன் பி டிக்க வலை கட்டியுள்ளனர். அப்போது ஏதோ காலில் தட்டு படுவதை கண்டு தண்ணீருக்குள் மூழ்கி பார்த்தபோது, 6 அடி உயரமுள்ள  முழு கல்சிலை  மற்றும் தலை மட்டும் உள்ள சிலை புதைந்திருப்பது  தெரிந்தது. ஆச்சரியமடைந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து தண்ணீருக்குள் இருந்த சிலையை  கரைக்கு எடுத்து வந்தனர். பின் சேறாக இருந்த சிலைகளை தண்ணீரில் சுத்தம் செய்து பார்த்தபோது பழங்கால நரசிங்க பெருமாள் சிலை என்பது  தெரியவந்தது.  சிலை ஆற்றில் அடித்து வந்ததினால் பாகங்கள் சேதமடைந்திருந்தது. இருப்பினும் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டு நரசிங்கப் பெருமாள்  சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !