உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் இன்று திருநங்கைகள் திருவிழா

கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் இன்று திருநங்கைகள் திருவிழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில், இன்று அரவாணிகள் திருவிழா நடக்கிறது. பரங்கிப்பேட்டை அடுத்த  கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் திருநங்கைகள் திருவிழா நடந்து வருகிறது. வெளி மாநிலங்கள் மற்றும்  வெளி மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இங்கு வந்து பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு இன்று 24ம் தேதி திருந ங்கைகள் திருவிழாவையொட்டி நுாற்றுக்கணக்கான திருநங்கைகள் வந்து குவிந்துள்ளனர். அதையொட்டி கடந்த 12ம் தேதி கொடியேற்றப்பட்டு  தொடர்ந்து இரவு மகாபாரதம் நாடகம் நடந்து வருகிறது. 21ம் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருகல்யாணமும், சுவாமி வீதியுலா நடந்தது. 22ம் தேதி  வீராட பர்வம் என்னும் மாடு பிடி சண்டையும், 23ம் தேதி சுவாமி வீதியுலா காட்சியும் நடந்தது. முக்கிய விழாவான இன்று 24ம் தேதி, இரவு கோவில்  முன்பு திருநங்கைகள் தாலிக்கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா காட்சியும், 25ம் தேதி திரு த்தேர் உற்சவமும், 64 அங்க லட்சணம் பொருந்திய அரவான் களப்பலி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !