பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா!
ADDED :3752 days ago
பழநி:பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப் பாலுாட்டும் விழா நடந்தது.நேற்று காலை 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி, திருஞானசம்பந்தர் ஆகிய உற்சவ மூர்த்திகள் கோயிலை வலம் வந்தனர். அதன்பின் சிறப்பு அபிஷேகம், தீபாரதனைக்கு பின், அம்பாளிடம் இருந்து கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது.