வடலூர் தருமசாலை 150ம் ஆண்டு துவக்க விழா
ADDED :3424 days ago
வடலுார், : வடலுாரில், வள்ளலார் நிறுவிய, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையின், 150வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. வடலுாரில், 1867ம் ஆண்டு, மே 23ம் தேதி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையை நிறுவிய வள்ளலார், அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்க துவங்கினார். தருமசாலையின், 150ம் ஆண்டு துவக்க விழா, சத்திய தருமசாலை வளாகத்தில், நேற்று நடந்தது. விழாவையொட்டி, தருமசாலையில், 17ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை, அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம், அகண்ட பாராயணம், 20ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை, திருஅருட்பா முற்றோதல் நடந்தது.