உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப்பெருமாள் கோவில் தெப்போற்சவம்: பக்தர் பரவசம்!

வீரராகவப்பெருமாள் கோவில் தெப்போற்சவம்: பக்தர் பரவசம்!

திருப்பூர்: தேர்த்திருவிழாவில், நேற்று தெப்போற்சவம் நடைபெற்றது. தாயார்களுடன் எம்பெருமான் எழுந்தருளியதை, பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் பத்தாம் நாள் நிகழ்வாக, தெப்போற்சவம், நேற்றிரவு நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சக்கரவர்த்தி அலங்காரத்தில், பூமி நீளாதேவி தாயார், கனகவல்லி தாயாருடன் ஸ்ரீ வீரராகவப்பெருமாள், எழுந்தருளினார். கனகாலயத்தை, ஐந்து முறை சுற்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் "கோவிந்தா கோஷத்துடன், பூக்கள் வீசி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !