உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பு.புளியம்பட்டி கரியகாளியம்மன் கோவிலில் தீ மிதி விழா கோலாகலம்

பு.புளியம்பட்டி கரியகாளியம்மன் கோவிலில் தீ மிதி விழா கோலாகலம்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில், பொன்னம்பாளையத்தில் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நேற்று காலை நடந்தது. திருக்குண்டம் முன் சிறப்பு பூஜை செய்து, கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். இதை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து பெண்கள், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (25ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா, நாளை (26ம் தேதி) மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !