திருமலை திருப்பதியில் அலைபேசிகள் ஏலம்
ADDED :3482 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் தங்கள் துறை சார்ந்த பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். தேவஸ்தானம், இவற்றை அலுவலகத்தில் பயன்படுத்தி வருகிறது. பயன்படுத்தாத பொருட்கள், ஏலம் விடப்படும்.இதன்படி, நன்கொடையாக கிடைத்த, 119 பெட்டிகளில் உள்ள அலைபேசிகள், 16 பெட்டிகளில் உள்ள பவர் பாங்குகளும் ஏலம் விடப்பட உள்ளன. இன்று, www.mstcecommerce.com / www.mstcindia.co.in என்ற இணையதளங்கள் வழியாக ஏலம் விடப்படும்.