உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

மாயனூர்: கரூர் மாவட்டம், மாயனூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் வைகாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோடையை முன்னிட்டு பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட மஞ்சனப் பொருட்கள் கொண்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டனர். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !