திருப்பரங்குன்றத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்றுத் திருவிழா
ADDED :3450 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்றுத் திருவிழா நடந்தது. இக்கோயிலில் சுவாமிக்கு உருவம் கிடையாது. அதற்கு மாறாக நான்கரை அடி உயரத்தில் அரிவாள்களும், இருபுறமும் கற்துாண்களும் உள்ளன. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய மணிகள் அங்கு ஏராளம் உள்ளன. இவற்றையே பக்தர்கள் வழிபடுவர். இங்கு வருவோர் கோயில் வளாகத்திலேயே தேங்காய், பழங்களை சுவாமிக்கு படைத்து பின் அங்கேயே சாப்பிட்டு விட்டு செல்வர். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கனி மாற்றுத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை திருப்பரங்குன்றத்திலுள்ள கோயில் வீட்டில் இருந்து மூவாயிரம் வாழைப்பழங்கள், 500 மாம்பழங்கள், 500 பலா சுளைகள், மாலைகள் மற்றும் பூஜை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று உச்சி கருப்பண சுவாமிக்கு படைத்தனர்.