திருமலை மலை பாதையின் இருபுறமும் மலர் செடிகள்!
ADDED :3531 days ago
திருப்பதி: திருமலை மலை பாதையின் இருபுறமும் மலர் செடிகளை நட, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி, சாம்பசிவ ராவ் கூறியதாவது:பசுமையை மீண்டும் பேணி காக்க, திருமலை முழுவதும், மலர் செடி, கொடி, மரங்கள் நடப்பட்டு வருகின்றன. திருமலை மலை பாதையில், தினமும், பல லட்சம் பக்தர்கள் பயணம் செய்கின்றனர். அவர்கள் சோர்வை போக்க, முதல், இரண்டாம் மலை பாதைகளின் இருபுறமும், கண்கவரும் வகையில், மலர் செடிகள் நடப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.