உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஞ்சிமேடு அனுமன் கோவிலில் மூல நட்சத்திர சிறப்பு ஹோமம்

இஞ்சிமேடு அனுமன் கோவிலில் மூல நட்சத்திர சிறப்பு ஹோமம்

செஞ்சி:இஞ்சிமேடு கல்யாணவரத அனுமனுக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேட்டில் பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள கல்யாணவரத அனுமனுக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 7 மணிக்கு பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கோபூஜையும் நடந்தது. காலை 9 மணிக்கு இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கல்யாண வரத அனுமனுக்கு சிறப்பு ஹோமம் நடத்தினர். ஹோம கலச நீர் கொண்டு கல்யாண வரத அனுமன், சீதா, லட்சுமண சமேத ராமருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சீதா, லட்சுமண, சமேத ராமர், கல்யாண வரத ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு அலங் காரம் செய்யப்பட்டது.சடகோப கைங்கர்ய சபாவினர் ஹோமத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !