/
கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோயில் ஊரணியில் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது: பக்தர்கள் பரிதவிப்பு!
கைலாசநாதர் கோயில் ஊரணியில் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது: பக்தர்கள் பரிதவிப்பு!
ADDED :3444 days ago
சாயல்குடி: சாயல்குடி கைலாசநாதர் கோயில் அருகில் உள்ள ஊரணியில் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் குளிக்க முடியாமல் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் சாயல்குடி கைலாசநாதர் கோயிலும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கோயில் அருகில் உள்ள ஊரணியில் குளிப்பது வழக்கம். தற்போது இந்த ஊரணி பராமரிப்பின்றி கருவேல மரங்கள் சூழ்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் குளிக்க முடியாமல் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். மேலும் மழை பெய்தர் தண்ணீர் தேக்க முடியாத நிலையும் உள்ளது. ஊரணியை துõர்வாரி மராமத்து செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர்.