உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்டிமாரியம்மனுக்கு இன்று கும்பாபிஷேகம்!

அட்டிமாரியம்மனுக்கு இன்று கும்பாபிஷேகம்!

கோவை: சின்னத்தடாகம் அட்டிமாரியம்மன் கோவில் மற்றும் கணபதி உதயவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. சி ன்னத்தடாகத்தில் அமைந்துள்ளது, அட்டி மாரியம்மன் கோவில். கோவில் கோபுரம் மற்றும் வளாகத்தில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு,  இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழா நேற்று மாலை, முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் கொண்டு வருதலுடன் துவங்கியது.  தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், இரவு, முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது. இன்று  அதிகாலை, 5:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, காப்பு அணிவித்தலை தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை, 7:15  மணிக்கு, திருக்குடங்கள் கோவிலை வலமாக கொண்டு வரப்பட்டு, 7:30 முதல் 8:00 மணிக்குள், அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை,  9:00 மணிக்கு, மகா அபிஷேகம், தச தரிசனம் நடக்கிறது.

உதய விநாயகர் கோவில்: கணபதி, உதயா நகரில் உள்ள  உதய விநாயகர் கோவிலில், புதிய கருவறை, அர்த்த மண்டபம், கோபுர விமானம்,  அண்ணாமலை மற்றும் வள்ளி, தேவயானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கும் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. கோவில்  வளாகத்தில் உள்ள  தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழா,  நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, கண் திறப்பு நிகழ்ச்சி, கோபுர கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை கங்கணம்  கட்டுதல், கும்ப அலங்காரம், முதற்கால யாக வேள்வி பூஜை நடந்தது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக ÷ வள்வி பூஜையை தொடர்ந்து, கலசம் கோவிலை வலமாக எடுத்து வரப்படுகிறது. காலை, 7:30 முதல் 8:30 மணிக்குள், கோபுர விமானம், உதய  விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !