வால்பாறையில் குருவாரப் பிரதோஷ பூஜை
ADDED :3452 days ago
வால்பாறை: வால்பாறையில் நடந்த பிரதோஷ பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இங்கு குருயோகம் தரும் குருவாரப்பிரதோஷ பூஜை ஜூன்.,3 ம் தேதி முன்தினம் மாலை நடந்தது. பூஜையில் சிவலிங்கத்துக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.