உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகுடஞ்சாவடி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மகுடஞ்சாவடி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. மகுடஞ்சாவடி, கனககிரி, திருவளிப்பட்டி காட்டுவளவில் உள்ள பெருமாள் கோவிலில், ஜூன்.,3 ம் தேதி காலை, 7.30 மணியளவில், கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீர்த்த குடம் எடுத்துவந்தனர். அவர்கள், திருவளிப்பட்டி சந்தை அருகே உள்ள, விநாயகர் கோவிலில் இருந்து, பெருமாள் கோவிலை வந்தடைந்தனர். கும்பாபிஷேகத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !