பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, கோடிப்புதூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில், 106 ஆண்டு திருவிழா நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கோடிபுதூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடக்கும் பரனை ஏறல் நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்பர். இதன் படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று(7ம் தேதி) இரவு கன்னிமார்களின் பூஜை, ஆராதனை நடக்கிறது. இதையடுத்து, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (8ம் தேதி), 11 மணிக்கு விழாவின் முக்கிய நிழ்வான பரனை ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி இரவு அபிஷேகம், ஆராதனையும், 10ம் தேதி காலை பூமாலை கழற்றல் மற்றும் அம்மன் பூஜை நிறைவு விழாவும் நடக்கிறது.