உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பி.கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பி.கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

புதுச்சத்திரம்: பி.கொசவம்பட்டி மாரியம்மன் கோவிலில், வரும், 9ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்த பி.கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, வரும், 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக, தீர்த்தம் அழைத்தல், மகா கணபதி, நவக்கிரகம், லட்சுமி ஹோமம், விக்னேஸ்வரா பூஜை, வாஸ்து சாந்தி, ரஷாபந்தனம், கும்பலங்காரம், முதல்கால யாக பூஜையும், இரவு, 8 மணிக்கு, கோபுர கலசம் பிரதிஷ்டை, கோபுரம் கண் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 9ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு, மாரியம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, தீபாராதனை, அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !