கும்பாபிஷேகத்தை ஒட்டி தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3453 days ago
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பகுட்டை, தாடிக்காரனூரில், நாளை காலை, 7 மணிக்கு, குழி இருசாத்தாள் அம்மன் ஆலயத்தில், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதையொட்டி, 420 பேர், சித்தர்கோவிலில் இருந்து நேற்று காலை தீர்த்தகுடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் வந்து கோவிலை அடைந்தனர்.