உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளார் கோவிலில் 21ம் தேதி திருவிழா

கொள்ளார் கோவிலில் 21ம் தேதி திருவிழா

திண்டிவனம்: கொள்ளார் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, வரும் ௨௧ம் தேதி துவங்குகிறது. திண்டிவனம் வட்டம், கொள்ளார் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா, வரும் ௨௧ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு அம்மனுக்கு பால் குடம் எடுத்தல், அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து ௯:௦௦ மணிக்கு கரக வீதியுலாவும், மதியம் 2 மணிக்கு சாகைவார்த்தலும் நடக்கிறது. இரவு 7:மணிக்கு அம்மனுக்கு கும்பம் படைத்து, அன்னதானம் நடக்கிறது. இரவு முத்துபல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. மறுநாள் (22ம் தேதி) காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !