உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே சித்தாத்தூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த, பத்து நாட்களாக காலையில் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. நேற்று காலை, 10 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், வெம்பாக்கம், தூசி, சித்தாத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, துரியோதனன் படுகளத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து மாலை தீ மிதி விழா நடந்தது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !