அழகு நாச்சியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
ADDED :3453 days ago
அந்தியூர்: அந்தியூரை அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தில், அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா இன்று நடக்கிறது.
முன்னதாக கடந்த மாதம், 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்வான, தீ மிதிக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தீ மிதிப்பதால், வெள்ளிதிருப்பூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். வரும், 10ம் தேதி மஞ்சள் நீராட்டுடன், விழா முடிகிறது.