புனித ஆரோக்கிய அன்னை தேர்பவனி
ADDED :5140 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.,6மற்றும் 7ல் பாதிரியார் ஜேம்ஸ் தலைமையில் குணமளிக்கும் வழிபாடு மற்றும் திருப்பலி நடந்தது. நேற்று காலை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் சிறப்பு திருப்பலி நடத்தியபின், ஆரோக்கிய அன்னையின் தேர்பவனி ஆலயத்திலிருந்து புல்லமடை ரோடு வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. வட்டார அதிபர் ஜெயபதி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் பாதிரியார் அமல்ராஜ், வின்சென்ட் டீ ராஜன் ,ஓடைக்கால் ஊராட்சி தலைவர் வேதமாணிக்கம், பாரனூர் வேல்முருகன், அருண் ஜீவநாதன், ராஜேஸ்கண்ணன், ஜெரால்டு,அமலன்,டிஜோஸா உட்பட பலர் பங்கேற்றனர்.