உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணி திருவிழா நிறைவு

வேளாங்கண்ணி திருவிழா நிறைவு

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நேற்று நிறைவடைந்தது.நாகை அடுத்த வேளாங்கண்ணி மாதா ஆண்டுத் திருவிழா, ஆகஸ்ட் 29ம் தேதி துவங்கி, öŒப்டம்பர் 8ம் தேதி வரை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பெரிய சப்பர பவனி நடந்தது.மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை 6 மணிக்கு, தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு பேராலய முகப்பில் ஏற்றப்பட்டிருந்த மாதாவின் உருவம் பொறித்த கொடி, இறக்கப்பட்டது. தொடர்ந்து, பேராலய கீழ் கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !