உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோவில் விழா

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் விழா

அன்னுார்: பசூர், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், 31ம் ஆண்டு விழா நடந்தது. பசூரில், கெங்கம்மாள், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், 31ம் ஆண்டு விழா நடந்தது. அதிகாலையில் கணபதி பூஜை, சுதர்சன ஹோமம், நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, திருமஞ்சனம் நடந்தது. சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. மதியம் அலங்கார பூஜையும், அன்னதானம் வழங்குதலும் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அன்னுார், கோவை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !