கோனூரில் பகவதியம்மன் கோயில் திருவிழா
ADDED :3449 days ago
கன்னிவாடி: கோனுாரில் காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முன்னதாக அம்மன் சாட்டுதல் நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் பண்டாரப்பெட்டி அழைப்பு, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீராடலுடன், பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.