அரவக்குறிச்சி மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :3449 days ago
கரூர்: அரவக்குறிச்சி அருகே நடந்த மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அரவக்குறிச்சி சவுந்திரபுரம் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 3ம் தேதி அபிசேக ஆராதனையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்தி ஊர்வலமாக முக்கிய நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். நேற்று மாலை முளைப்பாரி நிகழ்ச்சியும், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.