உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்!

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்!

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சி ன்னதடாகம்  வீரபாண்டி ரோட்டில் பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 1926, ஜூன்,  6ல் கும்பாபிஷேகம் நடந்தது.  இவ்விழாவுக்கு பின், இக்கோவில் போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து கிடந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோவிலை புதுப்பித்து, புதிய  பொலிவுடன் கட்டும் பணி துவங்கியது. தற்போது, கோவிலில் கரிவரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்க புதிய கருவறை  கட்டப்பட்டுள்ளது. இது தவிர, முன் மண்டபம், பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதிகள் எழுப்பப்பட்டுள்ளன. கோவிலில் சக்கரத்தாழ்வார்,  அனுமன் சுவாமிகளுக்கும் தனித்தனி கோவில்கள் உள்ளன. இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கோவில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் ÷ மற்கொள்ளப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கொடிமரம் பிரதிஷ்டை மார்ச்சில் நடந்தது. கோவில் கும்பாபிஷேகம் செப்., 4ல் நடக்கிறது.  இதையொட்டி பழைய கோவிலில் பாலாலயம் நடந்தது. இதில், காரமடை வேதவியாச பட்டர் தலைமையில், பட்டாச்சாரியார்கள் யாகவேள்வி  நடத்தினர். திவ்யபிரபந்த சாற்றுமுறை, ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !