பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :5138 days ago
சேலம்: தம்மம்பட்டி, பெருமாள் மலையில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.தம்மம்பட்டி, நாகியம்பட்டி, கொண்டையம்பள்ளி ஊர்களுக்கான பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள செல்வகணபதி, பாலமுருகன், தேவி, பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ள கோவிந்தராஜ பெருமாள், கருடன், கொடிகம்பம், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 7ம் தேதி கணபதி ஹோமம், அர்ச்சனை, ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.