உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணனுக்கு 1,600 நேந்திர வாழைக்குலைகள்!

குருவாயூர் கிருஷ்ணனுக்கு 1,600 நேந்திர வாழைக்குலைகள்!

குருவாயூர் : ஓணம் பண்டிகையை ஒட்டி, குருவாயூர் கிருஷ்ணனுக்கு, 1,600 நேந்திரம் வாழைக்குலைகளை சமர்ப்பித்து, பக்தர்கள் வணங்கினர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஓணம் பண்டிகைக்கு முதல் நாள் உத்திராட நிகழ்ச்சியில், பக்தர்கள் நேந்திரம் வாழைக்குலைகளை காணிக்கையாக சமர்ப்பிப்பது வழக்கம். இவ்வாண்டுக்கான நிகழ்ச்சி, நேற்று முன்தினம் குருவாயூரில் நடந்தது.காலை சீவேலி (உற்சவர் யானை மீதேறி, கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி)க்குப் பிறகு, கொடி மரத்தின் கீழே மாவினால் வரையப்பட்ட கோலத்தின் மீது வைக்கப்பட்டிருந்த வாழையிலையில், மேல்சாந்தி கிரீசன் நம்பூதிரி, முதல் வாழைக்குலையை சுவாமிக்கு அர்ப்பணித்தார். அவரைத் தொடர்ந்து வி.ஐ.பி.,க்கள், பக்தர்கள், வாழைக் குலைகள் சமர்ப்பித்தனர். இவ்வாறு ஒரேநாளில், 1,600 வாழைக்குலைகள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதி, யானைகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமிருந்தவை, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !