திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு தெப்போற்சவம்
ADDED :3442 days ago
திருப்பதி: திருப்பதி, திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, ஜூன், 16 முதல், வருடாந்திர தெப்போற்சவம் நடக்க உள்ளது.ஆந்திர மாநிலம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி, தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, ஜூன், 16 முதல், 20ம் தேதி வரை, தெப்போற்சவம் நடக்க உள்ளது. இதற்காக, திருச்சானுாரில் உள்ள பத்மசரோவரம் திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டு உள்ளது. குளத்தை சுற்றி, வண்ண கோலங்கள், மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்து வருகிறது. குளத்தில், புதிய தெப்பம் வடிவமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.