உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

காளத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி: புதுச்சேரி காளத்தீஸ்வரர் (செட்டிக்கோவில்) கோவில் வளாகத்தில் உள்ள வரதராஜபெருமாள்  கோவிலின் 13ம் ஆண்டு பிரம்மோற்சவ  விழா 11ம் தேதி துவங்கியது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள  செட்டிக்கோவில் என்றழைக்கும் காளத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள  வரதராஜபெருமாள் கோவிலின் 13ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை 10.30 மணிக்கு திருமஞ்சனம்,  மாலை 6  மணிக்கு மிருத்சங்கிரஹனம், விஷ்வக்சேனர் உள்புறப்பாடு நடந்தது. 12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவ விழாவில் தினமும் காலை, மாலையும்  சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது. ஐந்தாம் நாள் இரவு 7 மணிக்கு கருடசேவை வீதி புறப்பாடு, 6ம்  நாளை மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் யானை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !