உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போலி கைடுகள் மீது வழக்கு: பழநி பக்தர்கள் வரவேற்பு

போலி கைடுகள் மீது வழக்கு: பழநி பக்தர்கள் வரவேற்பு

பழநி: பழநி மலைக்கோயிலில் பக்தர்களை ஏமாற்றிய போலி கைடுகள் பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.பழநி மலைக் கோயிலில் ஒரு கும்பல் தங்களை கோயில் வழிகாட்டி (கைடு) என அறிமுகப்படுத்திக் கொண்டு பஸ் ஸ்டாண்ட், அடிவாரம், ரோப்கார், வின்ச் ஸ்டேஷன், பாத விநாயகர் கோயில் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிகின்றனர். பக்தர்களை வழிமறித்து, கோயிலுக்கு அழைத்துசெல்ல ரூ. 500 முதல் ரூ.2,௦௦௦ வரை பேரம் பேசுகின்றனர். இவர்களிடம் வெளியூர் பக்தர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். இதுகுறித்து எஸ்.பி., அலுவலகம், கோயில் தலைமை அலுவலக இணையதளத்திலும் அடிக்கடி புகார்கள் வருகின்றன. சரவணன் எஸ்.பி., மேற்பார்வையில் போலீசார் காவி உடை அணிந்து, கைடு என்ற பெயரில் வலம் வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் போலி கைடுகள் ௧௦ பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். இது பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !